மது விற்ற 7 பேர் கைது
மது விற்ற 7 பேர் கைது
சிவகாசி,
சிவகாசி உட்கோட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் உட்கோட்டம் முழுவதும் திடீர் சோதனை செய்து அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பவாஸ் (வயது 31), செல்வம் (43), அருண்பாண்டியன் (26), காசிநாதன் (55), முருகன் (33), முருகேசன் (39), செல்வம் (27) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 55 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் எரிச்சநத்தம் பகுதியில் பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக செல்வப்பாண்டி (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story