கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி எம்.எஸ்.ஆர். காலனியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் நெல்சன் துரைராஜ் (வயது 20). விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நண்பர்களுடன் அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார். குளித்துக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் நெல்சன் துரைராஜ் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயபாண்டியன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். 24 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நெல்சன் துரைராஜை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story