வீட்டை பூட்டி கொண்டு தீக்குளிக்க போவதாக மிரட்டியவர் கைது
வீட்டை பூட்டி கொண்டு தீக்குளிக்க போவதாக மிரட்டியவர் கைது
விருதுநகர்,
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி வ.உ.சி. தெருவைச்சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (வயது 35). இவரது மனைவி கலைவாணி (30). தினசரி மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்யும் கோகுலகிருஷ்ணன், மனைவியையும், மாமியாரையும் திட்டி வெளியே அனுப்பி விட்டு வீட்டு கதவை பூட்டிக்கொண்டு தான் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டினார் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் கலைவாணி உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்த பின்னும் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் தீயணைப்பு படையினரின் உதவியுடன் கதவைத்திறந்த போலீசார் கோகுலகிருஷ்ணனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story