பெருந்துறை அருகே வாகன சோதனை: ரூ.2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
பெருந்துறை அருகே நள்ளிரவு நடந்த வாகன சோதனையில் ரூ.2லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை
பெருந்துறை அருகே நள்ளிரவு நடந்த வாகன சோதனையில் ரூ.2லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
பெருந்துறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மார்டின்லூதர் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் சரளை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிச்செல்லும் சர்வீஸ் ரோட்டில் ஆம்னி வேனும், அதன் பின்னால் மொபட்டும் பெருந்துறையை நோக்கி சென்று கொண்டிருந்தன.
இதனால் அந்த வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் வேனையும், மொபட்டையும் ஓட்டி வந்த 2 பேரும் அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த 2 வாகனங்களையும் சோதனை செய்தனர். அதில் வேனுக்குள் 170 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பான் மசாலா பொட்டலங்களும், 200 பொட்டலங்கள் கொண்ட புகையிலை பொருட்களும் இருந்தன. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பித்து ஓடிய வேன் டிரைவரையும், மொபட்டை ஓட்டி வந்தவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story