புளியங்குடியில் காணாமல் போன சிறுவனை உடனடியாக மீட்ட போலீசார்


புளியங்குடியில் காணாமல் போன சிறுவனை உடனடியாக மீட்ட போலீசார்
x
தினத்தந்தி 16 March 2021 2:38 AM IST (Updated: 16 March 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் காணாமல் போன சிறுவனை போலீசார் உடனடியாக மீட்டனர்.

புளியங்குடி, மார்ச்:
புளியங்குடியில் நடைபெறும் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி உறையூரில் இருந்து முஸ்தபா என்பவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகன் முகமது முஷரப் ஆகியோருடன் புளியங்குடி வந்துள்ளார். அப்போது திடீரென முகமது முஷரப் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஒரு மணி நேரத்திற்குள் சிறுவனை கண்டுபிடித்தனர். பின்னர் அச்சிறுவனனை பெற்றோரிடம் ஒப்படைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். காணாமல் போன சிறுவனை விரைவாக கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த புளியங்குடி போலீசாரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

Next Story