கோபி அருகே துணிகரம் மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் நகை பறிப்பு; மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
கோபி அருகே மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துணிகரமாக நகையை பறித்து சென்று உள்ளனர்.
கடத்தூர்
கோபி அருகே மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துணிகரமாக நகையை பறித்து சென்று உள்ளனர்.
மொபட்டில்...
கோபி அருகே உள்ள மூனாம்பள்ளியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், இவருடைய மகள் ஜனனி (வயது 24). எம்.எஸ்.சி. முடித்து உள்ளார். இவர் நேற்று முன்தினம் சதுமுகையில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மொபட்டில் சென்றார்.
உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கோபியை அடுத்த வெட்டையம்பாளையம் பிரிவு சென்றபோது அவருக்கு பின்னால் 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
நகை பறிப்பு
இதில் மோட்டார்சைக்கிளின் பின்னால் உட்கார்ந்திருந்தவர் திடீரென ஜனனி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மோட்டார்சைக்களில் மின்னல் வேகத்தில் மர்மநபர்கள் தப்பி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story