பாசனத்துக்காக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.33 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக தாமரைக்கரை, கும்பரவாணி பள்ளம், கல்லுப்பள்ளம், வரட்டுப்பள்ளம் ஆகியவை உள்ளன.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து அந்த பகுதியில் உள்ள கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரி ஆகிய ஏரிகளுக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், அணையில் இருந்து கொப்பு வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
தண்ணீர் திறப்பு
ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அணையில் இருந்து பாசனத்துக்காக ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து கொப்பு வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முகமது சுலைமான் தலைமை தாங்கினார். இதில் அந்தியூர் பகுதி விவசாயிகள் கலந்துகொண்டு அணையின் மதகை இயக்கி பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவிட்டனர். இந்த தண்ணீர் மூலம் மக்காச்சோளம், எள் போன்ற குறுகிய கால பயிர்கள் பயிரிடப்பட உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர். அணையில் இருந்து தொடர்ந்து 66 நாட்களுக்கு தண்ணீர் திறந்தவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Related Tags :
Next Story