சோளிங்கர் பகுதியில் பறக்கும்படை சோதனையை கலெக்டர் ஆய்வு
சோளிங்கர் பகுதியில் பறக்கும்படை சோதனையை கலெக்டர் ஆய்வு
சோளிங்கர்
தேர்தலைெயாட்டி பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம், பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பறக்கும்படை சோதனையை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.
சோதனையில் ஈடுப்பட்டு பறக்கும்படை பணிகளை நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அரக்கோணம், சோளிங்கர், நீலகண்ட ராயப்பேட்டை, ஓச்சேரி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை செய்தார்.பறக்கும் படை பணிகள் குறித்தும், வாகனங்கள் பதிவு எண் மற்றும் சோதனையின் போது பறக்கும்படையினர் மக்களிடையே அனுகு முறைகளையும் பார்வையிட்டார்.
கலெக்்டர் உத்தரவின்பேரில் சோளிங்கரை அடுத்த ஆதிவராகபுரம் பஸ் நிறுத்தம் அருகே திருத்தணி சாலையில் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.திருத்தணி பள்ளிப்பட்டு பகுதிகளில் இருந்து சோளிங்கரை நோக் கி வந்த கார் இருச்சக்கர வாகனம், உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதேபோல சோளிங்கரை அடுத்த சூரை பஸ் நிறுத்தம் அருகே பறக்கும் படையினர், பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், செல்லும் வாகனங்களை மறித்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story