ரெயில் சேவை தொடங்கியது மேட்டுப்பாளையம் கோவை இடையே ரெயில் சேவை தொடங்கியது
ஒரு ஆண்டுக்கு பிறகு மேட்டுப்பாளையம்-கோவை இடையே ரெயில் சேவை தொடங்கியது.
மேட்டுப்பாளையம்
கொரோனா பரவியதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் ரெயிலும் நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு கொரோனா குறைந்ததை தொடர்ந்து போக்குவரத்து தொடங்கியது. ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ரெயில் விடவில்லை.
எனவே அந்த ரெயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
இதனால் பயணிகள் மகிழ்ச்சியுடன் அந்த ரெயிலில் பயணம் செய்த னர். காலை 8.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் விரைவு ரெயில் காலை 9.05 மணிக்கு கோவைக்கு சென்றடைகிறது.
அதன் பின்னர் கோவையில் இருந்து மாலை 5.55 மணிக்குபுறப்பட்டு மாலை 6.55 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. இதற்கு முன்பு இந்த வழித்தடத்தில் பயணிகள் ரெயில் இயக்கப் பட்டது.
காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை ஆகிய இடங்களில் ரெயில் நின்று சென்றது. கட்டணமாக ரூ.10 மட்டுமே வசூலிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த ரெயில் விரைவு ரெயிலாக மாற்றப்பட்டு கட்டணமும் ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அத்து டன் காரமடை ரெயில் நிலையத்தில் மட்டுமே நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அத்துடன் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்ைக விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story