மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலை சமாளிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு


மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலை சமாளிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 16 March 2021 7:38 AM IST (Updated: 16 March 2021 7:38 AM IST)
t-max-icont-min-icon

மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலை சமாளிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

கூடலூர்

மாநில எல்லையில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலை சமாளிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பேட்டியின்போது தெரிவித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியானது கேரள-கர்நாடகா மாநில எல்லையில் உள்ளது. கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர். சில நேரங்களில் ஆதிவாசி கிராமங்களுக்குள் மாவோயிஸ்டுகள் புகுந்து, மக்களை மிரட்டி உணவு பொருட்களை  பறித்து செல்லும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநில எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கூடலூர் பகுதியில் உள்ள மாநில எல்லைகளில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆய்வு நடத்தினார். 

அப்போது கூடலூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிக்கு சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்டார்.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

இதையடுத்து கக்கநல்லா சோதனைச்சாவடிக்கு சென்று போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்தினார். அப்போது மாநில எல்லைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். 

இதைத்தொடர்ந்து மசினகுடி க்கு சென்று ஆய்வு நடத்தினார். முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 49 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ரோந்து பணி தீவிரம்

மேலும் கேரள எல்லைகளில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்கள் உள்ளது. இதை சமாளிக்க மாநில எல்லையோரம் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் அதிரடி படையினருடன் துணை ராணுவ படையினரும் இணைந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உள்ளனர். 

இதில் கூடலூர் பகுதியில் மட்டும் 8 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. தொடர்ந்து கூடலூர் வனப்பகுதியில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story