ஊசி போடுவதில் தாமதம்; நோயாளிகள் வாக்குவாதம்
ஊசி போடுவதில் தாமதம்; நோயாளிகள் வாக்குவாதம்
ஊட்டி
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு உள்ளது. இங்கு காய்ச்சல், தலைவலி, கண், காது, மூக்கு, தொண்டை பாதிப்புக்கு தனித்தனியாக டாக்டர்கள் உள்ளனர். அவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் கொடுத்து ஊசி போட பரிந்துரைக்கிறார்கள்.
இந்தநிலையில் நேற்று காலையில் நோயாளிகள் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்தும் ஊசி செலுத்த செவிலியர் வரவில்லை. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர். தொடர்ந்து செவிலியர் வந்தபோது, அவரிடம் நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு அவர் இ.சி.ஜி. எடுப்பது மற்றும் ஊசி செலுத்தும் பணிக்கு ஒரு செவிலியர் தான் உள்ளார். இதனால் தாமதம் ஏற்படுகிறது என்றார். கூடுதலாக செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story