தடுப்பூசி போட்ட பிறகும் சேலம் சுகாதாரத்துறை அதிகாரிக்கு கொரோனா


தடுப்பூசி போட்ட பிறகும் சேலம் சுகாதாரத்துறை அதிகாரிக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 March 2021 8:24 AM IST (Updated: 16 March 2021 8:24 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சுகாதாரத்துறை அதிகாரிக்கு கொரோனா

சேலம்:
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முதல் கட்டமாக தூய்மைப்பணியாளர்கள், சுகாதார அலுவலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
சேலத்தில் பணியாற்றும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று சளி, காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது சுகாதாரத்துறை அலுவலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி  உள்ளது.

Next Story