ஆத்தூர்:சமையல் தொழிலாளி விபத்தில் பலி


ஆத்தூர்:சமையல் தொழிலாளி விபத்தில் பலி
x
தினத்தந்தி 16 March 2021 8:24 AM IST (Updated: 16 March 2021 8:24 AM IST)
t-max-icont-min-icon

சமையல் தொழிலாளி விபத்தில் பலி

ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62). சமையல் தொழிலாளியான இவர் ஈரோட்டில் இருந்து சதாசிவபுரம் நோக்கி ஆத்தூர் வழியாக மொபட்டில் வந்தார். ஆத்தூரை அடுத்த கொத்தாம்பாடி அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி முருகேசனின் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story