திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. கிராம மக்களிடம் வாக்கு சேகரிப்பு


திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  எம்.எல்.ஏ. கிராம மக்களிடம் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 16 March 2021 12:15 PM IST (Updated: 16 March 2021 12:07 PM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. கிராம மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி:

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பனையக்குறிச்சி, குவளக்குடி, கீழமுல்லைக் குடி ஆகிய ஊராட்சிகளில்கிராமம், கிராமமாக சென்று திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. பொதுமக்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், ஒன்றிய செயலாளர் கே. எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய பெருந்தலைவர் சத்யாகோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் மகா மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story