திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி செயற்குழு கூட்டம்
திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி செயற்குழு கூட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப் பள்ளியில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, இந்து முன்னணி நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன் தலைமை தாங்கினார். ஆட்டோ முன்னணி மாவட்ட செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் சைமன் பீற்றர், பாலகிருஷ்ணன், கணேஷ், மிக்கேல்ராஜ், பாலகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில செயலாளரும், ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாநில தலைவருமான மணலி மனோகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், ஆட்டோ ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது. தொழிலாளர் முன்னணியில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், இந்து முன்னணி திருச்செந்தூர் நகர பொது செயலாளர் முத்துராஜ், துணை தலைவர் மாயாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story