செய்துங்கநல்லூரில் துணை ராணுவப்படையினர், போலீசார் கொடிஅணிவகுப்பு


செய்துங்கநல்லூரில் துணை ராணுவப்படையினர், போலீசார் கொடிஅணிவகுப்பு
x
தினத்தந்தி 16 March 2021 7:10 PM IST (Updated: 16 March 2021 7:10 PM IST)
t-max-icont-min-icon

செய்துங்கநல்லூரில் துணை ராணுவப்படையினர், போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.

ஸ்ரீவைகுண்டம்:
சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு செய்துங்கநல்லூரில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பை செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
இந்த அணிவகுப்பானது செய்துங்கநல்லூர் இந்தியன் வங்கி முன்பு தொடங்கி, நெல்லை, திருச்செந்தூர் மெயின்ரோடு வழியாக சென்று, பின்னர் வசவப்பபுரம் சாலை, செய்துங்கநல்லூர் முக்கிய தெருக்கள் வழியாக சென்று நிறைவடைந்தது.
இந்த கொடி அணிவகுப்பில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் முனியாண்டி, கருப்பையா, அந்தோணி திலிப், அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர் 60 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 20 பேர், ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர்.

Next Story