சப்-கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்


சப்-கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 16 March 2021 8:21 PM IST (Updated: 16 March 2021 8:21 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் பங்குனி உத்திர திருவிழா: சப் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், வருகிற 22-ந்்தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கொடுமுடி‌ சென்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகனை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில் பங்குனி உத்திர திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து ெகாண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் ஆனந்தி தலைமை தாங்கினார். கோவில் துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும், 10 வயதிற்குட்பட்ட‌ குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும், ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது, பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் வழிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் கொரோனா காலம் என்பதால் மண்டகப்படி நடத்துவதற்கு 50 பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. 

பின்னர் பழனி அடிவாரம் பகுதிக்கு சென்ற சப்-கலெக்டர் ஆனந்தி, பாத விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையிலும்,  பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யும் இடங்களையும் ஆய்வு செய்தார். அப்போது பழனி தாசில்தார் வடிவேல் முருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா, வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி, சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் அப்துல் வகாப் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story