தி.மு.க. வேட்பாளர் உள்பட 5 பேர் வேட்பு மனுதாக்கல்
தி.மு.க. வேட்பாளர் உள்பட 5 பேர் வேட்பு மனுதாக்கல்
செம்பட்டி:
ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில், முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி போட்டியிடுகிறார். நேற்று இவர், ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசேகரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். அப்போது நிருபர்கள், குடகனாறு பிரச்சினை தொடர்பாக, பா.ம.க. வேட்பாளர் திலகபாமா என்னுடன் இ.பெரியசாமி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என கேள்வி எழுப்பியது குறித்து கேட்டனர்.
அதற்கு அவர், குடகனாற்றில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. இது குறித்து மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்கு தெரியும். பா.ம.க. வேட்பாளருக்கு குடகனாறு பற்றி ஒன்றும் தெரியாது. எதுவும் தெரியாதவரிடம் அதுகுறித்து விவாதிப்பது முறையல்ல என்றார்.
இதேபோல் நிலக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணவேணி மற்றும் திண்டுக்கல் தொகுதியில் சுயேச்சைகளாக ஹரிபிரகாஷ், பாஸ்கரன் செல்லப்பா, ரகமதுல்லா என நேற்று மொத்தம் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Related Tags :
Next Story