திருவண்ணாமலை; விவசாயிகள் தரையில் உருண்டு போராட்டம்


திருவண்ணாமலை; விவசாயிகள் தரையில் உருண்டு போராட்டம்
x
தினத்தந்தி 16 March 2021 9:20 PM IST (Updated: 16 March 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

அலுவலர்கள் கோரிக்கை மனு வாங்காததால் விவசாயிகள் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

அலுவலர்கள் கோரிக்கை மனு வாங்காததால் விவசாயிகள் தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சுனைப்பட்டு கிராமத்தில் இயங்கி வந்த சுனைப்பட்டு நேரடி நெல் கொள்முதல் மையத்தை மீண்டும் திறக்கக்கோரி மனு அளிக்க 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாக்கடை புருசோத்தமன் தலைமையில் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்திற்கு வந்தனர்.

 அப்போது அலுவலர்கள் கொரோனா தொற்று காரணமாக விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தின் முன்பு தரையில் படுத்து உருண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதைத் தொடர்ந்து நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை பெற்று கொண்டனர். 

இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story