பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா


பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
x
தினத்தந்தி 16 March 2021 9:50 PM IST (Updated: 16 March 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
நாகையில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார். இதில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதிய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.  பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு முடக்கப்பட்ட 3 தவணை பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும். 2018-ம்ஆண்டு முதல் கொடுக்க வேண்டிய மருத்துவ பில் மற்றும் அலவன்ஸ் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும்.
பஞ்சப்படி
2017-ம் ஆண்டு முதல் பஞ்சப்படியில் 15 சதவீதம் உயர்வுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story