சாலையோர இரும்பு தடுப்பு சீரமைக்கப்படுமா?


சாலையோர இரும்பு தடுப்பு சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 16 March 2021 10:39 PM IST (Updated: 16 March 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே கஜா புயலில் சேதமடைந்த சாலையோர இரும்பு தடுப்பு சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திட்டச்சேரி:
திருமருகல் அருகே கஜா புயலில் சேதமடைந்த சாலையோர இரும்பு தடுப்பு சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இரும்பு தடுப்பு
நாகை மாவட்டம் திருமருகல் அருகே பனங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் நாகூர்-நன்னிலம் சாலையை அன்றாடும் பயன்படுத்துகின்றனர்.மேலும் திருமருகல், நன்னிலம், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, மதுரை, வேலூர் வரை செல்லும் அனைத்து பஸ்களும் இந்த வழியில் இயக்கப்படுகின்றன.
மேலும் நாகை, திருவாரூர், நன்னிலம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில் பனங்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள 200 மீட்டர் தொலைவில் சாலையோரத்தில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
புயலில் சேதமடைந்தது
கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் பனங்குடி பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் 2 இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதில் சாலையோர இரும்பு தடுப்பு சேதம் அடைந்தது. கஜா புயல் வீசி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் சேதமடைந்த சாலையோர இரும்பு தடுப்பு சரி செய்யப்படவில்லை. இதனால் சாலையோரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழும் அபாய நிலை உள்ளது. 
இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையோர இரும்பு தடுப்பை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். 

Next Story