தியாகதுருகம் அருகே டிராக்டர் மீது கார் மோதல் தொழிலாளி சாவு
தியாகதுருகம் அருகே டிராக்டர் மீது கார் மோதல் தொழிலாளி சாவு
கண்டாச்சிமங்கலம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெரங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). தொழிலாளி. இவரும் திட்டக்குடி டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த இவரது நண்பர் ரவிச்சந்திரன்(39) ஆகியோர் கச்சிராயபாளையம் அருகே மாத்தூர் கிராமத்தில் சங்கர் என்வரது வீட்டில் தங்கி விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் மாத்தூர் கிராமத்தில் இருந்து உறவினரின் டிராக்டரில் திருக்கோவிலூருக்கு சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோர் சென்றனர். டிராக்டரை ரவிச்சந்திரன் ஓட்டினார். அவருக்கு அருகே சங்கர் அமர்ந்திருந்தார்.
அப்போது தியாகதுருகம் வீரசோழபுரம் மணிமுக்தாற்று பாலம் அருகே வந்தபோது டிராக்டருக்கு பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
படுகாயமடைந்த சங்கர், ரவிச்சந்திரன் மற்றும் கார் டிரைவரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி புன்னம் கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபாக உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து சங்கர் மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் பிரேம் குமார் மீது வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகிறனர்.
Related Tags :
Next Story