கிழக்கு கடற்கரை சாலையின் நடுவே அபாய பள்ளம்
மேலப்பிடாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள அபாய பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாங்கண்ணி:
மேலப்பிடாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள அபாய பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையின் நடுவே பள்ளம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து தூத்துக்குடி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் பஸ் மற்றும் லாரி, வேன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. மேலும் நாகையில் இருந்து மீன்கள் லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வேளாங்கண்ணிக்கு வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகை சேவுராயர் கோவில் அருகே சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் பள்ளத்தால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர். இதுபோன்று விபத்து அடிக்கடி நடைபெற்று வருகிறது.
விபத்து
இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்து ஏற்படுகின்றது. அந்த பள்ளத்திற்கு அடியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. அந்த குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பள்ளம் தெரியாமல் உள்ளது. பெரிய வாகனங்கள் செல்லும்போது அருகில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் தெளித்து விடுகிறது.
சாலையின் நடுவே உள்ள இந்த அபாய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்..அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
Related Tags :
Next Story