வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி
கடலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
கடலூர்,
கடலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்ற இருக்கும் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி கடலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள், உதவியாளர்கள் என 60 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு குடிமை பொருள் தாசில்தார் முரளிதரன், தாசில்தார் பலராமன் ஆகியோர் வாக்குச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
மேலும் எந்தெந்த படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும். வாக்குச்சாவடி மையங்களுக்குள் எந்த அடையாள அட்டையை கொண்டு வந்தால், அவர்களை அனுமதிப்பது போன்ற பல்வேறு பயிற்சிகளை அளித்தனர். மேலும் வாக்குப்பதிவு எந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது, அதில் பழுது ஏற்பட்டால் எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
கட்டுப்பாட்டு எந்திரம்
வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக செயல்விளக்கம் அளித்தனர். இங்கு பயிற்சி பெறும் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள், வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். அந்த பயிற்சியில் 2,132 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்க உள்ளதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான பலராமன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story