பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் சாவு


பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 16 March 2021 10:57 PM IST (Updated: 16 March 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய் நல்லூா் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் இறந்தார்.

அரசூர்,

கடலூர் மாவட்டம்  பண்ருட்டி தாலுகா கணிசப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் குமார் (வயது 15).  இவர் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். சீனிவாசன் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கிராமம் என்கிற திருமுண்டீச்சரம் கிராமத்தில் லாரி ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

 நேற்று மாலை குமார் தனது ஊரை சேர்ந்த  கதிர்வேல் மகன் அண்ணாமலை  என்பவருடன் மோட்டார் சைக்கிளில்  திருமுண்டீச்சரத்துக்கு வந்துள்ளார். அப்போது அரசூரில் இருந்து திருவெண்ணெய்நல்லூர்  நோக்கி சென்ற பஸ்சை அவர்கள் முந்தி செல்ல முயன்றுள்ளனர்.

 அப்போது எதிர்பாராதவிதாக கீழே விழுந்ததில், பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார். காயமடைந்த அண்ணாமலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

  இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story