கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எர்ரபையனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 25). இவர் கோவையில் தாங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மபுரியில் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பென்னாகரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story