காவேரிப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
காவேரிப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
காவேரிபாக்கம்
காவேரிபாக்கம் ஜெ.சி.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 46). ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனால் சேகர் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல நேற்று காலை வேலைக்கு சென்றுள்ளார்.
வேலை முடிந்து மீண்டும் மாலையில் வீட்டுக்கு வந்த சேகர் கதவை திறக்க முயன்றார். ஆனால் திறக்க முடியவில்லை. பின்பக்கமாக சென்று பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story