ஏலகிரி மலையில் பற்றி எரிந்த தீ
ஏலகிரி மலையில் பற்றி எரிந்த தீ
ஜோலார்பேட்டை
ஏலகிரி மலையில் நேற்று பொன்னேரி மலையடிவாரத்தில் உள்ள வனப்பகுதி தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த ஏலகிரி மலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து செடி, தழைகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாக தீ மளமளவென பரவி 10-வது கொண்டை ஊசி வளைவு மலைச்சாலை வரை எரிந்தது. இதனால் வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறினர். இந்த காட்டுத்தீயால் அரியவகை மரம், செடி, கொடிகள், புல் வகைகள் எரிந்து நாசமாயின. மேலும் ஆமை, பாம்பு உள்ளிட்ட உயிரினங்களும் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
ஏற்கனவே ஏலகிரி மலைப்பகுதியில் 2 முறை இதுபோன்று தீ பரவியது. இப்போது 3-வது முறையாக பரவியுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விஷம செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செ்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே நேற்று நடந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story