திருவாரூரில் ஆழித்தேரோட்டம்


திருவாரூரில் ஆழித்தேரோட்டம்
x
தினத்தந்தி 17 March 2021 12:05 AM IST (Updated: 17 March 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 வீடுகள், மளிகை கடைகள், டீக்கடை எரிந்து நாசமடைந்தது. இதில் ரூ.55 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

திருவாரூர்;
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவுக்கு  வரும் பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார்.
ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா வருகிற 25-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி ஆழித்தேர் மற்றும் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர் அலங்கரிக்கும் பணியை மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு, விழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உடனிருந்தார்.
ஆய்வுக்கு பின் கலெக்டர் சாந்தா கூறியதாவது:-
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவுக்கு வரும் பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். 
சமூக இடைவெளி
சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வர்த்தக நிறுவனத்தினர் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். சுகாதாரத்துறை மூலம் 4 இடங்களில் நிலையான மருத்துவ முகாம்களும், தேரை பின் தொடர்ந்து ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனமும் மற்றும் 2 நடமாடும் மருத்துவக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மருத்துவக்குழுவிலும் ஒரு மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், செவிலியர், பணியாளர் என 4 அலுவலர்கள் பணியில் ஈடுப்பட்டு இருப்பார்கள். திருவாரூர் நகராட்சியின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக நகரின் முக்கிய இடங்கள் மற்றும் தேரோடும் வீதிகளில் 10 குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுத்தம் செய்யும் பணி
மேலும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு 2 நிரந்தர கழிவறைகளும், 2  தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. தேரோடும் வீதிகள் மற்றும் முக்கிய பக்தர்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் பொது சுகாதாரப்பிரிவு பணியாளர்களை கொண்டு உடனுக்குடன் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், உதவி கலெக்டர் பாலசந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிகரன், செயல் அலுவலர் கவிதா, தாசில்தார் நக்கீரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சண்முகம், ஆகியோர் இருந்தனர்.

Next Story