திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா நிறைவு
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா நிறைவு பெற்றது.
புதுக்கோட்டை, மார்ச்.17-
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
கடந்த 8-ந் தேதி தேர்த்திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழா நேற்றுடன் முடிவடைந்தது. அம்மன் கோவிலில் இருந்து வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் வந்தடைந்தார். அங்குள்ள குளத்தில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. இதையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து குளத்தில் கரைத்தனர்.

Related Tags :
Next Story