இலுப்பூரில் 186 மதுபாட்டில்கள் பறிமுதல்


இலுப்பூரில் 186 மதுபாட்டில்கள் பறிமுதல்
x

இலுப்பூரில் 186 மதுபாட்டில்கள் பறிமுதல்

அன்னவாசல், மார்ச்.17-
இலுப்பூர் மேட்டுப்பட்டி அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த வடிவேலு (வயது 47) மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மதுபாட்டில்களை பறக்கும்படை அதிகாரிகள், இலுப்பூர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தனர். பின்னர் இதுகுறித்து மேல் நடவடிக்கைக்காக இலுப்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Next Story