தூய்மை பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு


தூய்மை பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 17 March 2021 12:32 AM IST (Updated: 17 March 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் தூய்மை பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு செய்தார்.

கோவை,

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சாய்பாபா காலனி, மணியம் வேலப்பர் வீதி, அம்மாசை வீதி, சின்னப்பன் வீதி, கலெக்டர் சிவக்குமார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். 

அப்போது மழைநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு போதிய அறிவுரை வழங்கினார். 

தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்களிடம் கால்வாய் களில் குப்பைகளை கொட்டக்கூடாது, மீறி கொட்டினால் அபராதம் விதிக்கப்படும், மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று கூறினார். 

மேலும் அந்த பகுதி பொதுமக்களிடம் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆணையாளர் கேட்டறிந்தார். 


Next Story