தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்


தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 17 March 2021 1:25 AM IST (Updated: 17 March 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

வங்கித்துறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 5 ஊழியர்களுக்கான சங்கங்கள் மற்றும் 4 அதிகாரிகளுக்கான சங்கங்கள் இணைந்து அகில இந்திய அளவில் 2 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அதன்படி 2-வது நாளாக நேற்று தஞ்சை மாவட்டத்தில் 300 வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் ேவலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் வெறிச்சோடின. வேலை நிறுத்தத்தையொட்டி பங்கேற்ற அதிகாரிகள், ஊழியர்கள் தஞ்சை பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைவிட வலியுறுத்தல்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்தியஅரசின் முயற்சியை கண்டித்தும், இந்த முயற்சியை கைவிட வலியுறுத்தியும், வாராக்கடனை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க கோரியும், பொது இன்சூரன்ஸ் துறையில் ஒரு கம்பெனியை தனியார் மயமாக்குவதற்கான சட்ட திருத்தங்கள் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என அறிவித்ததை எதிர்த்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. 2 நாட்கள் போராட்டம் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
பல ஏ.டி.எம். மையத்தில் பணம் வரவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Next Story