கோவை விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த வடமாநில தொழிலாளி கைது


கோவை விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த வடமாநில தொழிலாளி கைது
x
தினத்தந்தி 17 March 2021 1:32 AM IST (Updated: 17 March 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

கோவை விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை அவினாசி சாலை பீளமேட்டில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் விமான நிலைய வளாகத்தின் பின்புற பகுதியில் ஓடுதளத்தையொட்டி உள்ள சுவரை தாண்டி நேற்று மர்ம ஆசாமி ஒருவர் அத்துமீறி உள்ளே குதித்தார். 

இதைப்பார்த்த, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த ஆசாமியை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த முகமதுசதாம் (வயது 29) என்பதும், அவர் பீளமேடு பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. 

இவர் அந்த பகுதியில் இயற்கை உபாதை கழிக்க வந்ததாவும், தண்ணீர் தேடி விமான நிலையத்துக்குள் தெரியாமல் புகுந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து முகமது சதாமை போலீசார் கைது செய்தனர். 


Next Story