மாவட்ட கலெக்டருடன் காணொலி காட்சி மூலம் அதிகாரிகள் ஆலோசனை

கரூர்
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்தில் தேர்தல் பணிகளும் தீவிரமாகி நடந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள், அந்தந்த மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். மேலும், தற்போது கொரோனா தொற்று 2-ம் கட்டமாக தீவிரமடைந்துள்ளது. ஆகவே, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிய செய்ய வேண்டும். செல்லும் இடங்களில் சமூக இடைவெளியே பின்பற்ற செய்ய வேண்டும். இதனை தாங்கள் உறுதிபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

Related Tags :
Next Story