வாகன சோதனையில் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.17 லட்சம் பறிமுதல்


வாகன சோதனையில் ஏ.டி.எம். மையத்துக்கு  கொண்டு சென்ற ரூ.17 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 March 2021 2:03 AM IST (Updated: 17 March 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

வாகன சோதனையில் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.17 லட்சம் பறிமுதல்

உசிலம்பட்டி,மார்ச்
உசிலம்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வத்தலக்குண்டு சாலையில் உள்ள உத்தப்பநாயக்கனூர் சோதனை சாவடியில் போலீசாரும், பறக்கும் படையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன வாகனத்தை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வாகனத்தில் இருந்த ரூ.17 லட்சத்தை கைப்பற்றி விசாரணைக்காக உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். 
பறிமுதல்
இதில் ரூ.13 லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்தது. மீதம் உள்ள ரூ.4 லட்சத்துக்கு ஆவணங்கள் இல்லை. 
கணக்கில் குளறுபடி ஏற்பட்டதால் ரூ.17 லட்சத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மதுரை மகபூப்பாளையம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. அந்த ஆட்டோவில் வந்தவர் பிஸ்கட் வியாபாரி என்பதும் தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லை என்று அந்த பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். மதுரை மத்திய தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டூர் சாமி மற்றும் மேற்கு மாநகராட்சி உதவி கமிஷனர் சுரேஷ்குமார் முன்னிலையில் பணம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை தரும் பட்சத்தில் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

Next Story