திருச்சி கோட்டை பகுதியில் 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருச்சி கோட்டை பகுதியில் 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
மலைக்கோட்டை,
திருச்சி கோட்டை பகுதிக்கு உட்பட்ட தேவதானம் ரெயில்வே கேட் அருகில் உள்ள ஒரு பட்டறையில் ரேஷன் அரிசியை வாங்கி, எந்திரத்தின் உதவியுடன் அதை பாலீஷ் செய்து, வெளி மார்க்கெட்டில் அதிகவிலைக்கு விற்றுவருவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒருவர் மொபட்டில் அரிசி மூட்டைகளுடன் வந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் மண்ணச்சநல்லூரை சேர்ந்த மோகன்(வயது 29) என்பதும், ரேஷன் அரிசி கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசியையும், மொபட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story