தேர்தல் விதியை மீறியதாக ஸ்ரீரங்கம் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் மீது வழக்கு


தேர்தல் விதியை மீறியதாக ஸ்ரீரங்கம் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 March 2021 2:17 AM IST (Updated: 17 March 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் விதியை மீறியதாக ஸ்ரீரங்கம் அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம், 
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன். இவர், நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான மகேந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். 2 பேர் மட்டுமே வேட்பாளருடன் வரவேண்டும் என தேர்தல் விதி உள்ள நிலையில், கு.ப.கிருஷ்ணனின் ஆதரவாளர்கள் அலுவலக வளாகத்தில் பலர் திரண்டு நின்றிருக்க, அவர் தாசில்தார் அலுவலகத்திற்குள் 5 பேருடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், கு.ப.கிருஷ்ணன் மற்றும் சிலர் மீது தேர்தல் சட்ட விதிகளை மீறி ஒன்று கூடுதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story