வாக்காளர்களுக்கு வழங்க 29 லட்சம் கையுறை தயார்
வாக்குப்பதிவின் போது வாக்காளர்களுக்கு வழங்க 29 லட்சம் கையுறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவினாசி
வாக்குப்பதிவின் போது வாக்காளர்களுக்கு வழங்க 29 லட்சம் கையுறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கையுறை
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சற்றே ஓய்வெடுத்த கொரோனா சமீப காலமாக வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வாக்குப்பதிவின்போது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள சின்னங்களில் வாக்காளர்கள் அடுத்தடுத்து அழுத்தும்போது கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வாக்காளர்களுக்கு கையுறை வழங்கதேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முககவசம், வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் வலது கையில் அணிந்து வாக்களிக்கவும், ஓட்டுச்சாவடி பணியாளர்கள் இருகைகளிலும் அணியும் விதமாக 29லட்சம் கையுறைகள் தயார் நிலையில் உள்ளன.
குடோனில் இருப்பு
வாக்காளர்களின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள 3 ஆயிரத்து 510 தெர்மாமீட்டர்கள், பணியாளர்கள் பயன்பாட்டிற்கான 100 மில்லி கொள்ளளவு கொண்ட 36 ஆயிரத்து 773 பாட்டில் சானிடைசர், வாக்காளர்கள் பயன்பாட்டுக்காக 500 மில்லி கொள்ளளவு உள்ள 23 ஆயிரத்து 67 பாட்டில் சானிடைசர், 36 ஆயிரத்து 773 முககவசம் இவை அனைத்தும் அவினாசியில் உள்ள சிவில் சப்ளை குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது
Related Tags :
Next Story