கொரோனா தடுப்பு விதிமீறல்: வாழப்பாடியில், பேக்கரிக்கு ரூ.1,000 அபராதம் கலெக்டர் ராமன் அதிரடி நடவடிக்கை


கொரோனா தடுப்பு விதிமீறல்: வாழப்பாடியில், பேக்கரிக்கு ரூ.1,000 அபராதம் கலெக்டர் ராமன் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 17 March 2021 2:49 AM IST (Updated: 17 March 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு விதிமீறலுக்காக வாழப்பாடியில் பேக்கரிக்கு ரூ.1,000 அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் ராமன் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

வாழப்பாடி:
கொரோனா தடுப்பு விதிமீறலுக்காக வாழப்பாடியில் பேக்கரிக்கு ரூ.1,000 அபராதம் விதித்து மாவட்ட கலெக்டர் ராமன் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
கலெக்டர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல், உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் உள்பட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளது.
முககவசம் அணியாமல் விதிமீறலில் ஈடுபடுவோருக்கு ரூ.200 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. 
ரூ.1,000 அபராதம்
இந்நிலையில், வாழப்பாடி பேரூராட்சி கடைவீதியில், காபி பார் மற்றும் துணிக்கடையில்  சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.அப்போது முககவசம் அணியாத பேக்கரி ஊழியர்கள் மற்றும் உரிமையாளருக்கு சேர்த்து மொத்தம் ரூ.1,000 அபராதம் விதிக்க உத்தரவிட்டார். வாடிக்கையாளர்களுக்கு இலவச முககவசம் வழங்குவதாக தெரிவித்த துணி கடை ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். 
கடை ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். துணிக்கடை ஒன்றில் தனது உடல் வெப்பநிலையை ஊழியர்கள் மூலம் பரிசோதனை செய்து கொண்டார். ஆய்வின்போது வாழப்பாடி வட்டாட்சியர் மாணிக்கம், பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story