சேலம் மாவட்டத்தில் 18 பேர் வேட்புமனு தாக்கல்
சேலம் மாவட்டத்தில் நேற்று 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
3-வது நாள்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கு நேற்று 3-வது நாளாக வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் பாண்டியன் தனது பெயரில் 3 மனுக்களை கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான அமுதனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் சுஜாதா வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜோதி வாழப்பாடி தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் கோவிந்தனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேட்டூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிகண்டன், மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் சரவணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
18 பேர் வேட்பு மனு தாக்கல்
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு மை இந்தியா பார்ட்டி வேட்பாளர் கதிர்வேல், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி வேட்பாளர் முத்துசாமி, நாம்தமிழர் கட்சி வேட்பாளர் நாகம்மாள், பா.ம.க. வேட்பாளர் கல்பனா மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளர் என 6 பேர் சேலம் தாலுகா அலுவலகத்தில் உதவி கலெக்டர் சத்திய பால கங்காதரனிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு வீர தியாகி விஸ்வநாததாஸ் கட்சி வேட்பாளர் இளவரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் வேட்பாளர் வேல்முருகன் மற்றும் 2 சுயேச்சை வேட்பாளர்கள் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலரான ரவிச்சந்திரனிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ஒரு சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். அதன்படி நேற்று 3-வது நாளில் மொத்தம் 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story