199 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
மாவட்டத்தில் 199 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் கூறினார்.
ராஜபாளையம்,
மாவட்டத்தில் 199 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, மாவட்ட அளவிலான வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது இரு சக்கர வாகன பேரணியும நடைபெற்றது. சங்கரன் கோவில் சாலையில் உள்ள புதிய பஸ்நிலையம் எதிரே இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கண்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
துண்டு பிரசுரம்
வாகன பேரணியை தொடங்கி வைத்த கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார். பின்னர் பஸ்கள், அரசு அதிகாரிகளின் வாகனங்கள், பொது மக்களின் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களின் முகப்பில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
பதற்றமான வாக்குச்சாவடி
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் 100 சதவீத இலக்கை எட்டுவதற்காக அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்.
மாவட்டத்தில் 199 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த சாவடிகள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story