நெல்லையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை போலீஸ் ஐ.ஜி. முருகன் ஆய்வு


நெல்லையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை போலீஸ் ஐ.ஜி. முருகன் ஆய்வு
x
தினத்தந்தி 17 March 2021 2:55 AM IST (Updated: 17 March 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை போலீஸ் ஐ.ஜி. முருகன் ஆய்வு செய்தார்.

நெல்லை:
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் ஆய்வு நடத்தி வருகிறார். அவர் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் உள்ள குறைகளை உரிய அலுவலரிடம் கூறி அதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெறாத வகையில் கூடுதலாக முக்கியமான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேர்தல் பணியின்போது போலீசார் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் முறைகளை கடைபிடித்து முககவசம் அணிந்து பணி செய்ய வேண்டும். போலீசார் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப்களில் தேர்தல் குறித்து ஆடியோ வெளியிடுவது மற்றும் ‘ஸ்டேட்டஸ்’ வைப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

இக்கூட்டத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் கூடுதல், துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story