தனியார் மயமாக்கலை கண்டித்து மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் பணப்பரிவர்த்தனை பாதிப்பு
தனியார் மயமாக்கலை கண்டித்து சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
சேலம்:
தனியார் மயமாக்கலை கண்டித்து சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
2-வது நாளாக வேலை நிறுத்தம்
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கலை கண்டித்து சேலம் மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வங்கி ஊழியர்கள் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை கைகளில் ஏந்தி நின்றனர்.
பணப்பரிவர்த்தனை பாதிப்பு
இதுகுறித்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அதிகாரிகள் கூறும் போது, ‘வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் சேலம் மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் 2 நாட்களில் ரூ.300 கோடிக்கு மேல் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் காசோலை பரிமாற்றம், பணம் செலுத்துதல், எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணப்பரிவர்த்தனை பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் சில ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story