சேலம் ஊத்துமலையில் திடீர் தீ
சேலம் ஊத்துமலையில் திடீர் தீ
ஏற்காடு:
சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலையில் குரங்கு, முயல், நரி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு திடீரென ஊத்துமலையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காற்றின் காரணமாக இந்த தீ மளமளவென பரவ தொடங்கியது. இந்த தீ விபத்தில் மரங்கள், செடிகள் எரிந்து நாசமாகின. சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்காடு பஸ்நிலையம் அருகே, நியூ டவுன் பிளாட் பகுதி உள்ளது. இதன் அருகில் உள்ள தரிசு நிலத்தில், நேற்று முன்தினம் மாலையில் திடீரென தீப்பற்றி பரவியது. தகவல் அறிந்து அங்கு வந்த ஏற்காடு தீயணைப்பு படையினர், தீப்பற்றி எரிந்த இடம் மலைச்சரிவு என்பதால், ஒரு மணி நேரம் போராடி காட்டுத்தீயை அணைத்தனர்.
Related Tags :
Next Story