நெல்லையில் குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைப்பு


நெல்லையில் குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 16 March 2021 9:41 PM GMT (Updated: 16 March 2021 9:41 PM GMT)

நெல்லையில் குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நெல்லை:
நெல்லை மாநகரம், தச்சநல்லூர் மற்றும் டவுன் பகுதியில் கொலை, கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுவந்த ராமையன்பட்டி, ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் ஆசிர் செல்வம் மற்றும் நெல்லை பாளையங்கோட்டை கனகநாத நாயனார் தெருவைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் இசக்கிமுத்து ஆகிய 2 பேரும் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு உத்தரவின் பேரில் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். மேலும் நெல்லை மாநகரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை மொத்தம் 12 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நெல்லை தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் கிட்டான் என்ற நவநீதகிருஷ்ணன் (வயது 29). இவர் அந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்தார். உடனே அவரை தாழையூத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன்பிள்ளை ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று கிட்டானை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story