டி.என்.பாளையம் அருகே சோகம்: பிறந்தநாளன்று விபத்தில் வாலிபர் சாவு
டி.என்.பாளையம் அருகே பிறந்தநாளன்று வாலிபர் ஒருவர் விபத்தில் பலியானார்.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே பிறந்தநாளன்று வாலிபர் ஒருவர் விபத்தில் பலியானார்.
பிறந்தநாள்
டி.என்.பாளையம் அருகே உள்ள வடக்குமோதூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 18). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இவருக்கு பிறந்தநாள். நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அதன்பின்னர் அன்று மாலை மோட்டார்சைக்கிளில் டி.ஜி.புதூர் நால்ரோட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். ஏழூர் கால்நடை ஆஸ்பத்திரி முன்பு சென்றபோது, முன்னால் ஒரு மோட்டார்சைக்கிளில் வேட்டுவன் புதூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சென்றுெகாண்டு இருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் பழனிச்சாமியின் மோட்டார்சைக்கிள் மீது ஸ்ரீதரின் மோட்டார்சைக்கிள் மோதியது.
இறந்தார்
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தரையில் விழுந்த ஸ்ரீதர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பழனிச்சாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீதரின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.
Related Tags :
Next Story