தட்டகரை வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம்


தட்டகரை வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 17 March 2021 3:33 AM IST (Updated: 17 March 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

தட்டகரை வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தியூர்
தட்டகரை வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 
மான் இறைச்சி
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தட்டகரை வனப்பகுதியில் கூடலூர் என்ற இடத்தில் வனச்சரகர் பழனிசாமி, வனவர் ரூபன் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றார்கள். அப்போது காட்டுக்குள் 3 பேர் கையில் சாக்குபையுடன் சுற்றிக்கொண்டு இருந்தார்கள். வனத்துறையினரை கண்டதும் 3 பேரும் அங்கிருந்து ஓடினார்கள். உடனே வனத்துறையினர் 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தார்கள். பின்னர் சாக்கு பைகளை சோதனை செய்து பார்த்தபோது, அதற்குள் மான் இறைச்சி, சுருக்கு கம்பிகள் இருந்தன. 
அபராதம்
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பிடிபட்ட 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள். 
அதில் அவர்கள் கர்நாடக மாநிலம் முக்கியம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 45), மாதப்பன் (55), சுப்பிரமணி (63) ஆகியோர் என்பதும், 3 பேரும் சேர்ந்து சுருக்கு கம்பி வைத்து   கடமானை வேட்டையாடியதும் தெரியவந்தது.  இதைத்தொடர்ந்து வனத்துறையினர் 3 பேரையும் மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன் முன் ஆஜர் படுத்தினார்கள். 
அவர் 3 பேருக்கும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் சுருக்கு கம்பிகள், மான் இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story