நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 15 நாட்களில் 426 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 15 நாட்களில் 426 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
நெல்லை, மார்ச்.17-
நெல்லை மாவட்டத்தில் கொரோனா மிகவும் குறைந்துவிட்ட நிலையில் அதனை முழுமையாக விரட்டுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்காக தனிஅறை ஒதுக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இங்கு 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர், 45 வயது முதல் 59 வயது வரை உள்ள இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் தினமும் ஏராளமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இங்கு மட்டும் கடந்த 15 நாட்களில் 426 பேர் தடுப்பூசி போட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர் இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 51 பேர் ஆவார். 45 முதல் 59 வயது வரை உள்ள 7 பேரும், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 87 போலீசாரும் அடங்குவர். மீதமுள்ளவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஆவார்கள்.
Related Tags :
Next Story