கடையம் அருகே வில்லிசை கலைஞர்கள் மாநாடு
கடையம் அருகே வில்லிசை கலைஞர்கள் மாநாடு நடந்தது.
கடையம்:
நெல்லை மாவட்ட கிராமிய வில்லிசை கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் 36-வது ஆண்டு விழா மற்றும் வில்லிசை மாநாடு கடையம் அருகே உள்ள புலவனூர் முப்புடாதி அம்மன் கோவில் திடலில் நடந்தது. மாநாட்டிற்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தங்கதுரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செல்லக்கனி, ராமசாமி, பொன்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தலைவர் ஜெகநாதன் வரவேற்று பேசினார். செயலாளர் ராமர், பொருளாளர் செல்லத்துரை ஆகியோர் சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், வில்லிசை கலைஞர்களின் சேவைகள் குறித்தும் பேசினார்கள்.
இதைத்தொடர்ந்து ராமாயணம், மகாபாரதம், பார்வதி அம்மன் கதை, பேச்சி அம்மன், சுடலைமாடன் கதை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வில்லிசை பாடப்பட்டது. மாநாட்டில் வில்லிசை கலைஞர்கள் ராமர், தங்கசாமி, பாலமுருகன், தங்கதுரை, மாரியம்மாள், சாந்தி, ஜெகநாதன், செல்லத்துரை, சுப்புலட்சுமி உள்ளிட்ட 43 கலைஞர்களின் வில்லிசை நிகழ்ச்சி காலை முதல் மாலை வரை நடந்தது. மேலும் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
Related Tags :
Next Story